அமீரக செய்திகள்

மீலாது நபி விடுமுறை: இலவச பார்க்கிங்கை அறிவித்த அபுதாபி..!!

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) மீலாது நபி விடுமுறையை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு வியாழக்கிழமை பொது பார்க்கிங் இடங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர், Darb டோல் கேட் செயல்படும் நேரங்கள், பேருந்து மற்றும் ஃபெர்ரி சேவை அட்டவணைகளின் வேலை நேரங்களையும் அறிவித்துள்ளது.

அதன்படி, அக்டோபர் 21 வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 23 சனிக்கிழமை காலை 7:59 மணி வரை சர்ஃபேஸ் பார்க்கிங் இடங்கள் இலவசமாக இருக்கும். கூடுதலாக, முசாஃபா தொழில்துறை பகுதியின் வாகன நிறுத்துமிடம் M18 அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் இலவசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு 9:00 மணி முதல் காலை 8:00 மணி வரை ரெசிடென்ஸ் பெர்மிட் பார்க்கிங் இடங்கள் தொடர்பான விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி, அந்த குறிப்பிட்ட பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் மற்றும் போக்குவரத்து ஓட்டத்தைத் தடை செய்யுமாறு வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ITC-யின் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் அக்டோபர் 21 வியாழக்கிழமை விடுமுறையின் போது மூடப்பட்டு, அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ITC-யின் இணையதளம், Darb வலைத்தளம் மற்றும் Darb அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ITC-யின் சேவைகளுக்கு ஆன்லைனில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

கூடுதலாக, வாடிக்கையாளர்கள் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 அல்லது டாக்ஸி கால் சென்டர் 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையில் Darb டோல் கேட் அமைப்பு இலவசமாக இருக்கும் என்று ITC அறிவித்துள்ளது. சனிக்கிழமையன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் பொது போக்குவரத்து சேவைகளைப் பொறுத்தவரை, அபுதாபி, அல் அய்ன் சிட்டி மற்றும் அல் தாஃப்ரா பிராந்தியத்தில் பொதுப் பேருந்து சேவைகளின் நேரங்கள் வெள்ளிக்கிழமை அட்டவணையைப் பின்பற்றும். ஜெபல் அல் தனா துறைமுகம் மற்றும் டால்மா தீவுக்கும் மற்றும் சாதியத் மற்றும் அல் ஆலியா தீவுகளுக்கும் இடையே உள்ள ஃபெர்ரி சேவைகள் அவற்றின் தற்போதைய அட்டவணைப்படி இயங்கும்.

பேருந்துகள் அல்லது ஃபெர்ரிகளைப் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும், பயண நேரங்களை சரிபார்க்கவும் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் Darb அப்ளிகேஷனைப் பயன்படுத்துமாறு பொதுப் போக்குவரத்து பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!