அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தகவல்..!!

அமீரகத்தில் இன்று வானிலையானது வெப்பமாகவும், தூசி நிறைந்ததாகவும், இருக்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) படி, அல் அய்ன் உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் அளவில் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வானிலை மையத்தின் தகவல்படி ஈரப்பத அளவு 25 முதல் 90 சதவீதம் வரை நாள் முழுவதும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்கு மேல் வீசும் மிதமான வடமேற்குக் காற்று சில சமயம் மணிக்கு 40 கிமீ வேகத்தில் வீசும் காற்று பகலில் தூசியைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக பகல் நேரங்களில் அதிகளவு தூசி வீசும் என்பதால் கவனத்துடன் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!