அமீரக செய்திகள்

பாஸ்போர்ட்டில் இனி அமீரக ரெசிடென்ஸி விசா ஸ்டாம்ப் தேவையில்லை..!! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!

அனைத்து துறைகளிலும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் அமீரகம் தற்பொழுது விசா வழங்குவதிலும் சில புதிய நுட்பங்களை புகுத்தி பாஸ்போர்ட்டில் ரெசிடென்ஸி விசா ஸ்டிக்கர்களின் தேவையை நீக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி குடியிருப்பாளர்களுக்கு எமிரேட்ஸ் ஐடியே அவர்களின் ரெசிடென்ஸி ஆவணமாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 11 (இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பாஸ்போர்ட்டில் முத்திரையிடப்பட்ட ரெசிடென்ஸ் விசா ஸ்டிக்கர்களின் தேவையை புதிய எமிரேட்ஸ் ஐடி நீக்குகிறது.

இந்த முடிவு அமலுக்கு வந்துள்ளதையடுத்து புதிய ரெசிடென்ஸி விசாவிற்காக அல்லது விசா புதுப்பிப்பதற்காக இனி விண்ணப்பம் செய்பவர்கள், இரண்டு தனித்தனி விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதற்கு பதிலாக இந்த செயல்முறையானது ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை விசா முத்திரையிடுவதற்காக இமிக்ரேஷன் அலுவலகங்களில் கொடுக்க வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அரபு செய்தித்தாள் நிறுவனமான அல் கலீஜ் இது பற்றி தெரிவிக்கையில், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) உயர் அதிகாரியை மேற்கோள் காட்டி, இந்த நடவடிக்கை 30 முதல் 40 சதவிகிதம் ரெசிடென்ஸி ஆவணங்களைப் பெறுவதற்கான முயற்சிகளையும் நேரத்தையும் குறைக்கும் என்று கூறியுள்ளது.

அத்துடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளுக்கு பிறகு, ரெசிடென்ஸ் ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான செயல்முறைகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டையான எமிரேட்ஸ் ஐடி சமீபத்தில் ஒரு பெரிய மேம்படுத்தலைப் பெற்றது. இந்த புதிய பதிப்பானது விசா ஸ்டிக்கரில் கிடைக்கும் அனைத்து ரெசிடென்ஸி விசா தொடர்புடைய தகவல்களையும் கொண்டுள்ளது. 

இந்த நடைமுறையை அடுத்து இனி ரெசிடென்ஸி ஸ்டிக்கர் ஆணையத்தின் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, மக்கள் தங்கள் ரெசிடென்ஸி தொடர்பான விவரங்களை அச்சிடப்பட்ட வடிவத்தில் (printed form) ஆணையத்தின் முத்திரையுடன் மூன்று படிகளில் பெறலாம் என்றும் இதை ஆப் அல்லது இணையதளம் (www.icp.gov.ae) மூலம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமானப் போக்குவரத்துத் துறையில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ICP ஒருங்கிணைத்து, இந்த புதிய ரெசிடென்ஸி செயல்முறை தொடர்பான புதுப்பிப்புகள் குறித்து அவர்கள் தெரிந்து வைத்து அதற்கேற்ப செயல்பாடுகள் மேற்கொள்வதை உறுதிசெய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, பாஸ்போர்ட் ரீடர் மூலம் அதிகாரிகள் அமீரகத்திற்குள் அவர்கள் நுழைவதற்கான நிலையைச் சரிபார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!