அமீரக செய்திகள்

அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் 18 DPI-கொரோனா டிரைவ்-த்ரூ பரிசோதனை மையங்கள்..!! 

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபி வரும் நபர்களுக்கான நடைமுறையை மாற்றியமைத்து புதிய நடைமுறையானது கடந்த டிசம்பர் 24 ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. அபுதாபி நெருக்கடி, அவசரநிலைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்திருக்கும் இந்த புதிய நடைமுறையின்படி, அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னர் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாவிற்கான PCR அல்லது DPI நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அபுதாபி வரும் நபர்கள் எளிதில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக துபாய் அபுதாபி எல்லை பகுதியான கன்தூதில் (Ghantoot) அமைக்கப்பட்டிருந்த கொரோனாவிற்கான DPI பரிசோதனை மையமும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது இந்த பரிசோதனை மையம் வியாழக்கிழமை முதல் மூடப்பட்ட நிலையில், அபுதாபி எல்லை பகுதியில் புதிதாக 18 டிரைவ்-த்ரூ DPI லேசர் சோதனை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.

அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு, கந்தூத்துக்கு முன் உள்ள அல் ஃபயா சாலையில் (Al Faya Road) இந்த புதிய சோதனை நிலையங்களை அமைப்பதாக அறிவித்துள்ளது.

அல் ஃபயா சாலை (E75) என்பது ஷேக் சயீத் சாலை (E11) மற்றும் ஷேக் முகமது பின் சையத் சாலை (E311) ஆகியவற்றுக்கு இடையேயான சாலையாகும்.

அல் ஃபயா சாலையின் இருபுறமும் இந்த சோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையிலான நுழைவு பகுதிகளில் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக புதிய பாதைகள் (New Lanes) திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!