அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் தொழில் தொடங்குவதற்கான வயது வரம்பை குறைத்த அமீரக அரசு.. புதிய சட்டம் அமல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வயது வரம்பானது புதிய வணிக பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளதாக அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் (MoE) தெரிவித்துள்ளது. ஜனவரி 12, வியாழக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பட்ட வணிகப் பரிவர்த்தனை சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

அமீரகத்தின் இந்த புதிய திருத்தப்பட்ட வணிக பரிவர்த்தனை சட்டத்தின்படி, தனிநபர் ஒருவர் அமீரகத்தில் தொழிலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தொழில் தொடங்குவதற்கான இந்த குறைந்தபட்ச வயது 21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் வணிகச் சூழலை ஆதரிக்கும் விதமாகவும், அதனை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த திருத்தும் நடைமுறைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வணிகங்கள்/வணிக உரிமையாளர்கள் வங்கி வெளிப்பாடுகள் மற்றும் மின்னணு ஏலங்கள் தொடர்பான விஷயங்கள் உட்பட பல மாற்றங்கள் இந்த திருத்தப்பட்ட வணிக பரிவர்த்தனைகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அமீரக அரசின் இந்த திருத்தங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் கடந்த அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டிருந்ததும், இப்போது அவை சட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமீரக அரசின் திருத்தப்பட்ட புதிய வணிக பரிவர்த்தனை சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களை கீழே காணலாம்.

— அமீரகத்தில் தொழில் தொடங்க வயது வரம்பை 18 ஆக இந்த புதிய சட்டம் குறைத்துள்ளது.

— முதலீட்டைத் தூண்டுவதற்கும் வணிகங்கள் வளர்ச்சி மற்றும் போட்டிக்கான பரந்த வாய்ப்பை வழங்குவதற்கும் வங்கி நிறுவனங்களுக்கான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான சட்டக் குறிப்பை இந்த சட்டம் நிறுவியுள்ளது.

— நாட்டில் இஸ்லாமிய வங்கிக்கு ஆதரவை வழங்குவதுடன் நாட்டின் வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளில் ஒன்றாக அதை நிறுவுவதற்கு இந்த சட்டம் முக்கியத்துவம் வழங்குகிறது.

— நாட்டில் நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிறுவுதல் தொடர்பான விதிகளை இந்த சட்டம் திருத்தியுள்ளது. மேலும் நாட்டில் உள்ள பத்திரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி தேவையான உரிமங்களைப் பெறுவதை இந்த சட்டம் கட்டாயமாகியுள்ளது.

— தொழில்நுட்பத் துறை தொடர்பான வணிகங்களுக்கும், டிஜிட்டல் துறைகள் தொடர்பான வணிக நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!