அமீரக செய்திகள்

தமிழகம்: துபாயில் மரணித்த தாய்..!! தனியாய் தவித்த 10 மாத குழந்தை தந்தையுடன் இணைந்த உணர்வுப்பூர்வமான சம்பவம்..!!

தமிழகத்தில் இருந்து துபாய்க்கு தாயுடன் சென்ற பத்து மாத குழந்தையானது துபாயில் தாய் இறந்ததை முன்னிட்டு தனியாக தமிழகம் வந்து தந்தையுடன் இணைந்த சோக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

பாரதி என்பவர் தனது குழந்தை தேவேஷ் உடன் தமிழகத்தில் இருந்து இரு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு விசிட் விசாவில் வேலை தேடி வந்துள்ளார்.

துபாய் வந்த இடத்தில் தாய் பாரதி கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்துள்ளார். இதன் காரணமாக அவரது குழந்தையை அவரது நண்பர் ஒருவர் கவனித்து வந்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து அமீரகம் வர பயணத்தடை விதிக்கப்பட்டதால் தந்தை வேலவனுக்கு அமீரகம் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த மே 29 அன்று, பாரதி தனது 38 வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரது உடல் துபாயில் தகனம் செய்யப்பட்டது.

பாரதிக்கு ஏழு வயதில் மகன் ஒருவனும் இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 13 வயதில் மற்றுமொரு மகன் இருந்து அவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காலமாகியிருக்கிறார்.

இந்த குடும்பத்தின் அவலநிலை துபாயில் உள்ள இந்திய வெளிநாட்டவர் எஸ்.எஸ். மீரானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான திமுக தலைவராக உள்ளார்.

இது குறித்து மீரான் கூறுகையில்,: “துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூலம், குடும்பத்தின் அவல நிலையை நாங்கள் அறிந்தோம். இந்திய தூதரகம் செலவுகளைச் ஏற்கத் தயாராக இருந்தபோதிலும், தேவேஷை எனது சொந்த செலவில் திருப்பி அனுப்பும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். NOC சான்றிதழ் மற்றும் தூதரகத்திலிருந்து அங்கீகாரம் பெற்ற பிறகு, தேவேஷை தமிழகத்தில் உள்ள தந்தையிடம் அழைத்துச் செல்ல நான் ஒரு தன்னார்வலருக்கு ஏற்பாடு செய்தேன்” என்று கூறியுள்ளார்.

மீரான் மேலும் கூறுகையில், “இந்த கடினமான நாட்களுக்குப் பிறகு தேவேஷ் தனது தந்தை மற்றும் சகோதரருடன் மீண்டும் இணைந்துள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் நிலையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து குழந்தையை கவனித்து அதன் தந்தை மற்றும் சகோதர்ர் என குழந்தையின் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்குமாறு மீரானுக்கு அறிவுறுத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலவனுக்கு உடனடி நிவாரணமாக தமிழக அரசு சார்பாக ரூ 300,000 (சுமார் 14,800 திர்ஹம்) வழங்கியுள்ளதாகவும் மீரான் கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வருக்கும் மீரானுக்கும் குழந்தையின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேலவனுக்கு ஹோட்டல் துறையில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் ஒரு சில மாதங்களில் அந்த வேலையில் சேர்ந்து கொள்ளலாம் எனவும் மீரான் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!