வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு பதிலாக நாட்டு குடிமக்களை பணியமர்த்தும் திட்டம்..!! பல புதிய தொழில்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல்..!! அறிவிப்பை வெளியிட்ட சவூதி அமைச்சகம்…!!

சவுதி அரேபியாவில் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources and Social Development – MHRSD) சவுதிமயமாக்கல் (Saudization) இயக்கத்தை புதிய தொழில்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் திட்ட மேலாண்மை (project management) கொள்முதல் மற்றும் விற்பனை (procurement and sales) ஷிப்பிங் நடவடிக்கைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் (outlets providing services for shipping activities and freight brokerage) மற்றும் அலங்காரம் மற்றும் பெண்கள் தையல் நிலையங்கள் (outlets for decor and women’s tailoring) போன்ற தொழில்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதிமயமாக்கல் இயக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சவுதி அரேபிய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த திட்டம் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சவூதி நாட்டு மக்களுக்கு அதிக ஊக்கமளிக்கும் மற்றும் உற்பத்தி வேலை வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்கேற்பின் அளவை உயர்த்தும் நோக்கத்துடன் அமைச்சகம் மேற்பார்வை அதிகாரிகளுடன் இணைந்து, சவுதிமயமாக்கல் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் திட்ட மேலாண்மை துறையின் (project management) சவுதிமயமாக்கல், நகராட்சி, ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் திட்ட மேலாண்மைத் தொழிலில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முதல் கட்டம் 35 சதவீதத்தையும், இரண்டாம் கட்டம் 40 சதவீத சவூதிமயமாக்கலையும் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் இந்த வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் 6,000 சவூதி ரியாலாக சவூதி நாட்டு மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, விற்பனை மேலாளர், உள் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர் (internal sales and customer services manager), காப்புரிமை நிபுணர் (patent specialist), சந்தைப்படுத்தல் விற்பனை நிபுணர், பிரிண்டர் மற்றும் நகலெடுக்கும் உபகரண விற்பனையாளர் (printer and copying equipment salesman), கணினி விற்பனையாளர், சில்லறை விற்பனை மேலாளர், மொத்த விற்பனை மேலாளர், வணிக நிபுணர் மற்றும் விற்பனை நிபுணர் போன்றவை சவுதிமயமாக்கலின் கீழ் வரும் விற்பனைத் தொழில்களில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், தொழில்நுட்பத் தொழில்களில் ஒரு சவூதி பெண் தொழிலாளியை நியமிக்கும் விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது. அத்துடன் மருத்துவ உபகரணங்கள் துறையின் உள்ளூர்மயமாக்கலின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தொழில்கள் மற்றும் செயல்பாடுகளின் உள்ளூர்மயமாக்கல் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களை விளக்கும் நடைமுறை வழிகாட்டிகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆகையால், இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் சட்டரீதியான தண்டனைகளைத் தவிர்ப்பதற்காக இந்தத் தீர்மானங்களுக்கு இணங்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!