அமீரக செய்திகள்

பெண் தனியாக பயணிப்பதற்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதல் வரிசையை பிடித்த துபாய்…!!

உலகளவில் பல்வேறு தரப்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தொடர்ந்து பல பிரிவுகளில் முதன்மையாக ஐக்கிய அரபு அமீரக நகரங்கள் இருக்கின்றன. அதில் தற்பொழுது பெண்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் உலகளவில் துபாய் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

UK-ஐ தளமாகக் கொண்ட பயணக் காப்பீட்டு நிறுவனமான InsureMyTrip இன் ஆய்வின்படி, துபாய் நகரில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருப்பதால், உலகளவில் பெண்கள் தனியாகப் பயணிக்கும் மூன்றாவது பாதுகாப்பான நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவலில் “ஒட்டுமொத்தமாக, துபாயில் குற்ற விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளது. துபாய் ஒரு பெண்ணாகப் பயணிக்க பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகிறது. அத்துடன் துபாயில் உள்ள பெரும்பாலான பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கான தனி பிரிவை வழங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பின் அடிப்படையில் துபாய் அதிக மதிப்புகளை பெற்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக இரவில் தனியாக நடப்பது குறித்த ஆய்வில் 10 க்கு 9.43 மதிப்பெண்களும், பாலின அடிப்படையிலான தாக்குதல்கள் இல்லாததற்கு 10 க்கு 8.64 மதிப்பெண்களும் துபாய் பெற்றுள்ளது.

சமீபத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் ஆகியவை, தரவு சேவை வழங்குநரான Numbeo வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் முதல் 10 பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

InsureMyTrip ஆய்வின்படி, சவூதி நகரமான மதீனா 10/10 மதிப்பெண்களுடன் உலகளவில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான நகர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தாய்லாந்தின் சியாங் மாய் நகரம் 9.06 மதிப்பெண்களுடன் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக உள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டோவும், சீனாவின் மக்காவோவும் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கான முதல் ஐந்து பாதுகாப்பான நகரங்களை நிறைவு செய்துள்ளன.

குறைந்த பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட நகரங்களை ஆய்வு செய்யும் போது, ​​தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அதிக குற்ற விகிதங்கள் காரணமாக குறைந்த தரவரிசையில் உள்ளது. கோலாலம்பூர் (2வது), டெல்லி (3வது) மற்றும் ஜகார்த்தா (4வது) மற்றும் பாரீஸ் ஆகிய நகரங்கள் பெண் ஒருவர் தனியாக பயணிக்கக் கூடிய பாதுகாப்பான ஐந்து நகரங்களில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!