வளைகுடா செய்திகள்

15 ஆண்டுகள் வசித்த வெளிநாட்டினருக்கு ‘பிளாட்டினம் ரெஸிடென்ட் விசா’ அறிவித்த முதல் வளைகுடா நாடு..!! புதிய ஆணையை வெளியிட்ட பட்டத்து இளவரசர்..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்கள், நாட்டில் குறைந்தது 15 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அவர்களுக்கு பிளாட்டினம் ரெஸிடென்ட் பெர்மிட் எனும் நுழைவு விசா வழங்கும் ஒரு புதிய திட்டத்தினை பஹ்ரைன் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பஹ்ரைன் நாட்டின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா அவர்கள், வெளிநாட்டவர்கள் பஹ்ரைன் இராஜ்ஜியத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், அந்த குடியிருப்பாளர்களுக்கு நுழைவு விசா மற்றும் பிளாட்டினம் ரெசிடென்ட் பெர்மிட் வழங்கும் 2023 இன் புதிய ஆணையை (47) நேற்று செவ்வாய்கிழமை ஜூன் 27 ம் தேதி வெளியிட்டுள்ளார்.

எனினும் இந்த திட்டத்தில் சில நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, வெளிநாட்டவர்கள் இத்தனை ஆண்டு காலம் நாட்டில் வாழ்ந்த நன்னடத்தை, நம்பிக்கை, அவர்களின் மீதுள்ள குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இந்த பிளாட்டினம் விசாவானது வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின் படி, பஹ்ரைன் இராஜ்ஜியத்தில் வசித்த கடந்த ஐந்து வருடங்களில் சராசரி அடிப்படை சம்பளம் BHD 4,000 அல்லது அதற்கு மேல் உள்ள குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் தவிர, பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி ரியல் அரசாணை தொடர்பான HRH 2023 இன் புதிய அரசாணையையும் (48) வெளியிட்டுள்ளார். அதன்படி, பஹ்ரைனியர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கான பகுதிகளைக் குறிக்கும் 2003 இன் சட்டத்தின் (43) பிரிவு 1 ஆனது திருத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!