அமீரக செய்திகள்

UAE: ஆறே நாட்களில் 76 மில்லியன் உணவுகள் சேகரிப்பு..!! துபாய் மன்னரை பாராட்டிய அபுதாபி இளவரசர்..!!

அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், உலகெங்கிலும் உள்ள 50 நாடுகளில் உள்ள பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு உணவு ஆதரவை வழங்க மேற்கொள்ளப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் 1 பில்லியன் உணவு முயற்சியைப் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஷேக் முகமது ட்விட்டரில் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தேவைப்படுபவர்களுக்கு உதவும் நாட்டின் மனிதாபிமான மதிப்பிற்கு சான்றாகும் என கூறியிள்ளார்.

மேலும், “எனது சகோதரர் முகமது பின் ரஷீத் அவர்களால் தொடங்கப்பட்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட ‘ஒன் பில்லியன் மீல்ஸ்’ முயற்சி, ஐக்கிய அரபு அமீரக மக்களிடமிருந்து தாராளமான ஆதரவைப் பெற்றுள்ளது. அதன் வெற்றி, நமது நாட்டின் மனிதாபிமான செயலுக்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் நமது நீண்டகால அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிராந்தியத்தில் மிகப்பெரிய உணவு நன்கொடை இயக்கமான இந்த முயற்சி, ஆறு நாட்களுக்குள் 76 மில்லியன் உணவுகளை சேகரித்துள்ளது.

முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளால் (MBRGI) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சி, 50 நாடுகளில் உள்ள பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள், அகதிகள், இடம்பெயர்ந்த நபர்கள் மற்றும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு ஆதரவை வழங்குகிறது.

 தனிநபர்கள், நிறுவனங்கள், தொண்டு மற்றும் மனிதாபிமான நிறுவனங்கள் உள்பட பல்வேறு பிரிவினரும் 1 பில்லியன் மீல்ஸ் முன்முயற்சியின் முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குள், 76 மில்லியன் உணவுகளை வழங்கியுள்ளனர்.

இது 100 மில்லியன் உணவு பிரச்சாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 220 மில்லியன் உணவுகளுடன் சேர்த்து, சேகரிக்கப்பட்ட மொத்த உணவுகளின் எண்ணிக்கையை 296 மில்லியன் உணவுகளாகக் கொண்டுவருகிறது.

மேலும் இந்தியா, லெபனான், ஜோர்டான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட ஆறு நாடுகளில் உணவு விநியோகம் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!