வளைகுடா செய்திகள்

ஓமானில் பணியின் பொழுது இடிந்து விழுந்த கட்டடம்… தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!

ஓமன் நாட்டின் அல் தகிலியா கவர்னரேட்டில் உள்ள பழங்கால கட்டிடத்தின் மறுசீரமைப்பு பணியின் போது தொழிலாளர்கள் மீது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் நான்கு பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்தஹியா மாநிலத்தில் மிகவும் பழைய கட்டிடத்தை இடித்து சீரமைக்கும்பணி நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடந்த உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்த குழுவினர் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கடுமையான காயத்துடன் நான்கு பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நாளில் அல் தகிலியா கவர்னரேட்டில் நடந்த மற்றொரு விபத்தில், அல் ஜபல் அல் அக்தர் சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்தில் சிலருக்கு காயம் லேசாகவும், மேலும் சிலருக்கு காயம் பலமாகவும் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!