வளைகுடா செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் 66,000 தினார்களை வசூல் செய்த குவைத்..!!

குவைத் அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கியதையடுத்து, நிலம், வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து ஆகிய மூன்றிலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரே நாளில் சுமார் 66,000 தினார்களை வசூலித்ததாக அறிவித்துள்ளது.

குவைத் நாட்டவர்கள் மட்டுமல்லாமல் வளைகுடா நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களை குறிவைத்து, சனிக்கிழமையன்று அமலாக்கத்துறை எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் பெரியளவிலான விதிமுறைகளை மீறியவர்களில் 50 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உட்பட 70 பேர் அதிலும் பெரும்பாலும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்களின் விதிமீறலுக்காக உள்துறை அமைச்சக ஆன்லைன் போர்ட்டலில் சரிசெய்ய முடியாமல் பயணம் மேற்கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலர் பயணங்கள் திடீரென ரத்து செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் சில வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்த அறிக்கையின் படி குறிப்பிட்ட காரணங்களான, வேகவரம்புகளை மீறுவது அல்லது மாற்றுத்திறனாளிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது போன்றவை தொடர்பான அபராதங்களை அமைச்சகத்தின் இணையதளம் அல்லது பிற அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் செலுத்த முடியாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதற்கு மாறாக, இந்த விதிமீறுபவர்கள் தனிப்பட்ட முறையில் விதிமீறல் சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று, அவர்கள் உத்தேசித்துள்ள பயணத் தேதிகளுக்கு முன்பாக இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விதி மீறல்களை கையாள்வதில் போக்குவரத்து அதிகாரிகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக போக்குவரத்து அதிகாரிகள் ஆறு நிமிடங்களுக்குள் விதிமீறல்களை விரைவாக பதிவு செய்து அபராதம் கட்டுவதற்கான தகவலானது “Sahel” எனப்படும் செயலி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்களை சரியான நேரத்தில் கண்டறிந்து விரைவாக அபராதம் வசூலிப்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் மூலம், இனிவரும் நாட்களில் போக்குவரத்து விதி மீறல்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!