வளைகுடா செய்திகள்

ஓமான்: பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தும் சுகாதார அமைச்சகம்.. எங்கெல்லாம் இலவசமாக கிடைக்கும்..??

ஓமானின் சுகாதார அமைச்சகம் (MOH) நாட்டில் உள்ள பல தனியார் மற்றும் அரசு சுகாதார நிறுவனங்களில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. அத்துடன் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது சிறந்தது என அமைச்சகம் அனைவரையும் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பின்வரும் சுகாதார நிறுவனங்களில் பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.அவை

1. பத்ர் அல் சமா மருத்துவ குழும மருத்துவமனைகள் மற்றும் அதன் அனைத்து கிளைகள்

2. பாம்பே மெடிக்கல் காம்ப்ளக்ஸ் – ரூவி

3. அட்லைஃப் மருத்துவமனை – அமேரத் விலாயத்

4. மெடிக்கல் கேர் சென்டர் – சீப் மார்கெட்.

அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தொற்றுநோயியல் நிலைமையின் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும், நோய் மற்றும் அதன் சிக்கல்களின் அபாயத்திலிருந்து தனிநபரைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் அமைச்சகம் பூஸ்டர் டோஸ் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளது.

சில நாடுகள் பயணிகளுக்கு விதிக்கும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளில் பூஸ்டர் டோஸும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!