அமீரக செய்திகள்

இந்தியா- அமீரகப் பயணம்: போலி சார்ட்டர் விமான சேவை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்திய விமான நிறுவனம்..!!

இந்தியாவின் குறைந்த பட்ஜெட் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு சார்ட்டர் விமானங்களை இயக்குவதாக வெளிவந்த போலி சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட ட்ராவல் ஏஜெண்ட் ஜூலை மாதம் 7 ம் தேதி விமான நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு வணிக சார்ட்டர் விமான சேவைகளை வழங்குவதாக அவர்களின் கவனத்திற்கு வந்தது.

இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு செய்தியில், பயண நிறுவனம் கொச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்திற்கு 1,650 திர்ஹம் தொடங்கி டிக்கெட்டுகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் விமான டிக்கெட், விரைவான ஆன்டிஜென் சோதனை, விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் செல்ல போக்குவரத்து மற்றும் ஒரு இரவு ஹோட்டல் தனிமைப்படுத்தல் ஆகியவை அடங்கும் என்றும், தடுப்பூசியின் இரண்டு டோஸினைப் பெற்ற பயணிகள் (சினோபார்ம், ஃபைசர், ஸ்பூட்னிக் அல்லது கோவிஷீல்ட்) பயணம் செய்யலாம் மற்றும் செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

இது GCAA (பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம்) வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்றும் விளம்பரம் கூறியது.

ஆனால் கோ ஏர் என நிறுவப்பட்ட கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், புதன்கிழமை மாலை பயண நிறுவனம் தனது பெயரையும் மற்றொரு இந்திய விமான நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்துகிறது என்பதை அறிந்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதன் பொது விற்பனை முகவர் மூலம் பயண நிறுவனத்திற்கு சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளது மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் விமான நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் தனது பார்ட்னர்களுக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“நாங்கள் ஏற்கனவே எங்கள் GSA-வில் இருந்து அவர்களுக்கு சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளோம். அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை என்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டோம். எங்களைப் பொருத்தவரை, நாங்கள் அத்தகைய எந்தவொரு செயலுக்கும் அல்லது எந்தவொரு திட்டத்திற்கும் உறுதியளிக்கவில்லை. எங்கள் சட்டபூர்வமான தன்மைகளைப் பாதுகாக்க, நாங்கள் வர்த்தகத்திற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டோம், ” என்று விமானத்தின் பிராந்தியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது வாடிக்கையாளர்களுக்கும் தனது பார்ட்னர்களுக்கும் ஒரு அறிக்கையில், விமான நிறுவனம் கூறியதாவது “கோ ஃபர்ஸ்ட் (கோ ஏர் இந்தியா லிமிடெட்) தற்போதைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விமான சேவை குறித்த அறிவிப்பு கிடைக்காததால் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எந்தவொரு சார்ட்டர் விமான சேவைகளயும் இயக்கவில்லை மற்றும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதை அறிவிக்கிறோம்”.

“கோ ஃபர்ஸ்ட் அல்லது கோ ஏர் பெயரை பயன்படுத்தும் எந்தவொரு தகவல்தொடர்பு வழிகளிலும் மூன்றாம் தரப்பினரால் பரப்பப்படும் எந்தவொரு தகவலும் போலியானதாக கருதப்பட வேண்டும், மேலும் கோ ஃபர்ஸ்ட் எந்தவொரு தகவல் அல்லது தொடர்புடைய பரிவர்த்தனைகளுக்கும் பொறுப்பேற்காது”என்று தெரிவித்துள்ளது.

GCAA மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வகுத்துள்ள விதிமுறைகளை விமான நிறுவனம் தொடர்ந்து பின்பற்றுகிறது என்று பிராந்திய தலைவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்குகிறோம். ஆனால் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, அங்கீகரிக்கப்பட்ட வகைகளைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டும் அமீரகத்திற்கு பயணித்துள்ளனர். அவர்களில் கோல்டன் விசா பிரிவில் இருந்து ஒரு பயணியும், சில்வர் விசா பிரிவில் இருந்து ஒரு பயணியும் இருந்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கோல்டன் விசா, சில்வர் விசா அல்லது பயணம் செய்ய விரும்பும் அரசுப்பிரதிநிதிகள் உட்பட அமீரகத்தி்றகு பயணிக்க எந்தவொரு தகுதியான பயணிகளுக்கும், நாங்கள் விவரங்களை GCAA உடன் தாக்கல் செய்து அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். அது கிடைத்ததும், விமானத்திற்கான தரையிறங்கும் அனுமதிக்கு நாங்கள் தாக்கல் செய்ய வேண்டும் ” என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!