அமீரக செய்திகள்

அமீரகத்தில் இன்று 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு..!! வானிலை மையம் தகவல்..!!

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வானிலையானது வெப்பமாகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பில் அமீரகத்தில் பொதுவாக வெப்பமாகவும்  பகலில் சில நேரங்களில் தூசி நிறைந்ததாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று இரவு மற்றும் புதன்கிழமை காலை கடலோர மற்றும் உள் பகுதிகளில் பனி உருவாகும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பகல் நேரங்களில் வேகமாக வீசக்கூடிய காற்று தூசியை கிளப்பும் என்பதால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கவனத்துடன் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!