அமீரக செய்திகள்

UAE: புத்தாண்டை முன்னிட்டு 4.7 கிமீ நீளத்தில் 12 நிமிடங்களுக்கு நடக்கவிருக்கும் பிரம்மாண்ட வான வேடிக்கை நிகழ்ச்சி..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதுமே புத்தாண்டு கொண்டாட்டமானது வான வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், வரவிருக்கின்ற புத்தாண்டை முன்னிட்டு ராஸ் அல் கைமாவில் 12 நிமிட நேரத்திற்கு நீண்ட வான வேடிக்கை நிகழ்ச்சியானது பைரோடெக்னிக் டிஸ்ப்ளேயுடன் (pyrotechnic dipsplay) 4.7 கிலோமீட்டர் நீளத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் மர்ஜான் ஐலேண்ட் மற்றும் அல் ஹம்ரா வில்லேஜிற்கு இடையே உள்ள வாட்டர்ஃப்ரண்ட்டில் 4.7 கிமீ நீளத்திற்கு 12 நிமிடங்கள் நடக்கவிருக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியானது ராஸ் அல் கைமாவின் அல் மர்ஜன் தீவுக்கு (Al Marjan Island) அருகே கடலுக்கு மேலே பல்வேறு வடிவங்கள் மற்றும் கருப்பொருள்கள் கொண்ட வெடிபொருட்களால் பின்னணி இசையுடன் நிகழ்த்தப்படும் இந்த வான வேடிக்கை நிகழ்வானது மீண்டும் ஒரு உலக சாதனை படைக்கும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இடத்தில் நடத்தப்படும் பைரோடெக்னிக் காட்சிக்காக ராஸ் அல் கைமா ஏற்கனவே பல கின்னஸ் உலக சாதனைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட 2022 ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் 15,000 க்கும் மேற்பட்ட எஃபெக்ட்ஸ் மற்றும் 452 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் காவல்துறையின் குழுக்களின் தலைமையில் வரவிருக்கும் புத்தாண்டிற்கான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் மற்றும் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பொது மக்களின் பாதுகாப்பை இக்குழுவானது தொடர்ந்து உறுதிசெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!