அமீரக செய்திகள்

வான வேடிக்கை, லேசர், லைட்ஸ் ஷோ என புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு களைகட்ட இருக்கும் துபாய் புர்ஜ் கலீஃபா..!!

ஒவ்வொரு வருட புத்தாண்டின் போதும் துபாயில் இருக்கும் உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் (Burj Khalifa) வான வேடிக்கை, லேசர் ஷோ என புத்தாண்டு மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அது போலவே தற்பொழுது வரவிருக்கும் 2022-ம் ஆண்டு புத்தாண்டின் போதும் புர்ஜ் கலீஃபா களை கட்டப் போகின்றது என Emaar அமைப்பினர் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் புத்தாண்டை புர்ஜ் கலீஃபா தலை சிறந்த வான வேடிக்கைகள், பைரோடெக்னிக்ஸ், ஒளி மற்றும் லேசர் நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட இருப்பதாக அதன் டெவெலப்பரான Emaar நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஈவ் ஆஃப் வொண்டர் (Eve of Wonder)’ என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, புத்தம் புதிய லேசர் அம்சம் துபாய் ஃபவுண்டைனில் புர்ஜ் கலீஃபாவின் பிரமிக்க வைக்கும் திட்டத்துடன் ஒத்திசைந்து அறிமுகமாகிறது. இது புத்தாண்டு கொண்டாட்டத்தை மறக்கமுடியாத வகையில் புதிய அனுபவத்தை தரவிருக்கின்றது.

இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் ஆன்லைனிலும் உலகளவில் தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த Emaar NYE 2022 நிகழ்வானது உலகளவில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் mydubainewyear.com இல் உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

டவுன்டவுன் துபாயில் (downtown dubai) நடைபெறவிருக்கின்ற கண்கவர் புத்தாண்டு நிகழ்வுகள் குறித்து Emaar-ன் நிறுவனர் முகமது அல் அபார் அவர்கள் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் நமது தேசத்தின் சாதனைகளுக்கு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு அஞ்சலி. திறந்த மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் முன்னேற்றத்தின் புதிய யுகத்தை உருவாக்குவதற்கான எங்கள் தலைமையின் பார்வையை இது எடுத்துக்காட்டுகிறது, மேலும் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் Emaar பெருமிதம் கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31 அன்று டவுன்டவுன் துபாயை அணுக விரும்புபவர்கள் முன் பதிவு செய்ய U by Emaar செயலியைப் பயன்படுத்தலாம்.

புத்தாண்டிற்கு ஷேக் மொஹமட் பின் ரஷீத் பவுல்வர்டு (Sheikh Mohamed bin Rashid Boulevard) மற்றும் ஹோட்டல்கள் உட்பட டவுன்டவுன் துபாயின் அனைத்து இடங்களுக்கும் இதில் பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாகப் பதிவுசெய்த பிறகு, புத்தாண்டு தினத்தன்று டவுன்டவுன் துபாய்க்கு அணுகலைப் பெற அவர்கள் பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட QR குறியீடுகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!