வளைகுடா செய்திகள்

சவூதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது இனி கட்டாயம் இல்லை.. விதியை தளர்த்திய அரசு..!

சவுதி அரேபியா தொற்றுநோய்க்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் சமீபத்தில் நீக்கியுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டவர்கள் கோவிட்-19-க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்றும் நாட்டிற்குள் நுழையலாம், வெளியேறலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதிக்கு பயணம் செய்ய, வெளிநாட்டவர்கள் செல்லுபடியாகும் விசா மற்றும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும், அத்துடன் அவர்கள் செல்லும் நாடுகளில் நுழைவு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் கூறியுள்ளதாக செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் COVID-19-க்கு எதிராக தடுப்பூசி போடாமல் சவுதி அரேபியாவுக்கு பயணிக்கலாம், ஆனால் சரியான விசாக்கள்மற்றும் வதிவிட அடையாளங்கள் இருக்க வேண்டும் என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சுமார் 34.8 மில்லியன் மக்கள் வசிக்கும்சவுதி அரேபியாவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வாரம், முகக்கவசம் அணிவது பொது போக்குவரத்து மற்றும் விமானங்களில் நுழைய தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அனைத்து தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சவுதி அரசு நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!