வளைகுடா செய்திகள்

இந்த வருடத்தில் மட்டும் 47,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயணத்தடையை விதித்த குவைத்..!!

நாட்டில் உள்ள சட்ட விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு பயணத்தடை அறிவிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் நிகழ்வு பொதுவாக நடைமுறையில் இருப்பதே. அதனடிப்படையில் குவைத் நாட்டில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 47,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி குவைத்தில் இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் மொத்தமாக 47,512 தடை உத்தரவுகள் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரை விதிக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 30,689 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த தடை உத்தரவானது 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!