வளைகுடா செய்திகள்

குவைத்தில் சட்டத்தை மீறி தங்கியிருக்கும் பேச்சிலர்கள்… கடுமையான அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

குவைத் நாட்டில் முனிசிபாலிட்டி ஏரியாக்களில் உள்ள தனியார் மற்றும் மாடல் ஹவுசிங் பகுதிகளில் தங்கி இருக்கும் பேச்சுலர்களின் எண்ணிக்கையை குறைக்க தனி கமிட்டி அமைக்கப்பட்டு தற்பொழுது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அவசர கமிட்டியின் தலைவரும் அறிக்கையாளருமான Zaid Al-Enezi, கூறும் பொழுது விதிமுறைகளை மீறி சொத்து வாங்கிய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்பதே குழுவின் பணி என்று தெரிவித்தார்.

குறிப்பாக விதிமுறைகளை மீறி வாங்கிய இந்த குடியிருப்புகளில் வெளிநாட்டு இளைஞர்கள் அதிக அளவில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் கமிட்டியின் பணிகளுக்கு ‘ரியல் எஸ்டேட் மாஃபியா’ தடையாக இருப்பதாக அவர் கூறினார்.

குடிமக்கள் மற்றும் மாநில உரிமையை பாதுகாப்பதில் நாடு தற்பொழுது தீவிரமாக இறங்கி வருவதாகவும் அத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதமானது கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். அத்துடன் ரியல் எஸ்டேட் சொத்து உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் விதிமுறைகள் மற்றும் சட்டங்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹவாலி கவர்னரேட் முனிசிபாலிட்டி கிளையின் தலைவர், இப்ராஹிம் அல்-சபான், இது குறித்து கூறும் பொழுது தனியார் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பேச்சுலர்களை குறைக்கும் நோக்கில் வெற்றிகரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். இக்குழுவானது குறிப்பாக சால்மியா பகுதியில் கவனம் செலுத்துகின்றது என்றும் ரியல் எஸ்டேட் விதிமீறல்களை அடையாளம் காண கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக குழு தீவிரமாக கண்காணித்ததில், சால்மியா பகுதியில் 12 இல் உள்ள பல கட்டிடங்களில் சட்டத்தை மீறி பேச்சுலர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் இந்த கட்டிடங்களில் சில கடைகள் உணவகங்கள் மற்றும் ஒழுங்கேடான குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் ஆய்வின் போது மின்சார திருட்டு, அங்கீகரிக்கப்படாத நீட்டிப்புகள் மற்றும் கழிவுநீர் மேன்ஹோல்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல விதிமீறல்களைக் கொண்ட பல வீடுகள் அடையாளம் காணப்பட்டன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய விதிகளை மீறும் ரியல் எஸ்டேட் டீலர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் நகராட்சி உறுதியாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!